போலித் தடுப்பூசி கார்டைப் பயன்படுத்தாதீர்!

தொற்று நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புச் சட்டம் 1988இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் தங்களுக்கு இன்னும் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ளாதவர்கள் போலித் தடுப்பூசி கார்டைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுவதாக கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைவர், ஏ.சி.பி. அகமட் ஷுக்ரி மாட் ஆகிர் வலியுறுத்தினார். இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்பதை மறுக்கவில்லை. இருப்பினும் இச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க போலீஸ் தயக்கம் காட்டாது. இதில் 4 கண்காணிப்புப் பணிக்குழுக்களை போலீஸ் கொண்டுள்ளது. அவற்றில் நாளுக்கு 2 குழுக்கள் பேரங்காடிகள், உணவுக் கடைகள், நெடுஞ்சாலை நிறுத்தங்கள் ஆகியவற்றில் சோதனை மேற்கொண்டு பயணம் செய்யும் அனைவரும் 2 மருந்தளவுத் தடுப்பூசிகள் செலுத்தி விட்டதை உறுதிப்படுத்தும். அதோடு மட்டுமின்றி இம்மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் கீழ் 9 போலீஸ் நிலையங்கள் இருப்பதால் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் கண்காணிப்புப் பணிக்குழு அமைக்கப்படும் என்று அலோர்ஸ்டார் உத்தாரா டோல் சாவடியில் சாலைத் தடுப்பை மூடும் நேரத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் ஏ.சி.பி. அகமட் ஷுக்ரி மாட் ஆகிர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + four =