போபி போதை பொருள் கும்பல் முறியடிப்பு 7 லட்சம் வெள்ளி மதிப்புள்ள™ போதைப்பொருள் பறிமுதல்

0

தேடப்பட்டு வந்த போபி போதைப்பொருள் கும்பலை முறியடித்த போலீசார், அந்த கும்பலிடமிருந்து 7 லட்சத்து 12,452 வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்திருப்பதாக ஜொகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அயூப்கான் தெரிவித்தார்.
ஜூலை 27ஆம் தேதி முதல் ஜொகூர்பாரு மற்றும் இஸ்கண்டார் புத்ரியைச் சுற்றி நடத்தப்பட்ட 10 தனித்தனி சோதனைகள் மூலம் கிட்டத்தட்ட 7 லட்சம் வெள்ளி மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு போபி என்றழைக்கப்படும் ஓர் உள்ளூர் ஆடவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஐந்து நாட்களாக நடத்திய சோதனையில் இந்தப் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
சந்தேகத்தின் பேரில் மொத்தம் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 11 ஆண் மற்றும் 5 பெண் மலேசியாவைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் வியட்நாம், இந்தோனேசிய, சீன நாட்டைச் சேர்ந்த பெண்கள் ஆவர்.
அவர்களிடமிருந்து 32,000 வெள்ளி மதிப்பிலான தங்க ஆபரணங்கள், 2 வாகனங்கள், 7,000 வெள்ளி ரொக்கம் ஆகியவையும் போலீசார் கைப்பற்றியதாக அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × one =