போதை பொருள் விநியோகித்த ஆறு இளைஞர்கள் நிதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்

இரண்டு வாரங்களுக்கு முன்பு போதை பொருள் விநியோகித்ததாக குற்றஞ் சாட்டப்பட்ட ஐந்து சகோதரர்கள் உட்பட ஆறு இளைஞர்கள், இன்று திங்கட்கிழமை பேரா தாப்பா மஜிஸ்திரேட் நிதிமன்றத்தில் நிறுத்தப் பட்டனர்.

17 முதல் 23 வயதிற்குட்பட்ட ரதிஸ்வரன், சுதேந்திரன், ஶ்ரீதரன், சுதேசன் மற்றும் அவர்களது இளைய சகோதரன் மீது சுமத்தப் பட்டிருக்கும் குற்றச்சாட்டு, மஜிஸ்ட்ரிட் முஹம்மட் ஹரித் முஹம்மட் மஸ்லான் முன் வாசிக்கப்பட்டது.

இவர்களுடன் சேர்ந்து, கியோ என்று அழைக்கப்படும் மியன்மார் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

கடந்த நம்பவர் 4ஆம் தேதி காலை 9.15 மணியளவில் 37.2 கிலோகிராம் எடையுள்ள மெதம்பேட்டமைன் ரக போதை பொருளை தாப்பா, பாதாங் பாடாங் சென்டிரியாங் பகுதியின் செம்பனை தோட்டத்தில் விநியோகித்ததாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

1952ஆம் ஆண்டு அபாயகர போதை பொருள் சட்டம் பிரிவு 39-பி உட்பிரிவு ஒன்று, உட்பிரிவு ஏ மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டம் செக்‌ஷன் 34-கின் கீழ், இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், இவர்களுக்குச் சாகும் வரை தூக்கு தண்டனை வழங்கப்படும். மியன்மார் இளைஞருக்கு மலாய் மொழி தெரியாத காரணத்தினால் வழக்கின் மறு விசாரணை டிசம்பர் 9-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × five =