போதைப்பொருள் விவகாரம்; சட்டமன்ற உறுப்பினர் இடைநீக்கம்

0

போதைப்பொருள் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட டிங்கில் சட்டமன்ற உறுப்பினர் உட்பட இருவரை பெர்சத்து இளைஞர் பிரிவு இடைநீக்கம் செய்துள்ளதாக அதன் தலைவர் சைட் சாடிக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
அர்மாடா என்றழைக்கப்படும் அதன் இளைஞர் பிரிவின் கூட்டத்தில் அது முடிவெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அப்பிரிவின் துணைச் செயலாளரான அமாட் ரெட்ஸுவான் முகமட் ஷாபி இடைநீக்கம் செய்யப்பட்டு அவரின் பொறுப்புக்கு டேனியல் ஷாஹிரான் ஹோ இம்ரான் ஹோ நியமிக்கப்பட்டார்.
சிலாங்கூர் அர்மாடா தலைவராக இருந்த அடிப் ஷான் அப்துல்லா இடைநீக்கம் செய்யப்பட்டு அவரின் பதவிக்கு அனாஸ் அக்காஷா நஸ்ரி நியமிக்கப்பட்டார்.
விசாரணை முடியும் மட்டும் அவர்களின் இடைநீக்கம் அமலில் இருக்கும் என சைட் சாடிக் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை போலீசாரின் போதைப்பொருள் தடுப்புச் சோதனை நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட 17 பேரில் பெர்சத்துவின் அவர்களிருவரும் அடங்குவர்.
டிங்கில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அடிப் முதலில் தமது கைதினை மறுத்து, அந்தச் சமயத்தில் தாம் வீட்டில் இருந்ததாகச் சொன்ன பின்னர், அந்த தவறான இடத்தில் இருந்ததை ஒப்புக் கொண்டார்.
அந்த விவகாரத்தைப் போலீசின் விசாரணைக்கு விட்டு விடுவதாக பெர்சத்துவின் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − 2 =