
சுமார் வெ.7ஆயிரம் மதிப்பிலான போதைப்பொருளான கெத்தும் இலை நீரை போலீசார் கைப்பற்றியதாக தைப்பிங் மாவட்ட போலீஸ் படைத்தலைவர் ஒஸ்மான் மாமாட் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார். இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு11 மணியளவில் துரோங் பாடாங் காஜா பகுதியில் நடந்ததாக அவர் குறிப்பிட்டார். மேலும் 51 வயது மதிக்கத்தக்க ஆடவரை போலீசார் கைது செய்ததோடு அவர் விற்பனைக்காக வைத்திருந்த கெத்தும் இலை நீரை கைப்பற்றினர் என்றார்.