போதைப்பொருள் குற்றப்பிரிவில் ஐவர் கைது

0

மலேசிய போலீஸ் படையின் குற்றச்செயல் ஒழிப்புப் பிரிவு ஜொகூர் மாநிலத்தில் நடத்திய அதிரடிச் சோதனையில் கிட்டதட்ட 5 நபர்கள் மற்றும் வீடுகளில் இருந்து போதைப்பொருள் மற்றும் மாத்திரைகள் கைப்பற்றப் பட்டுள்ளன.
நேற்று முன்தினம் காலை நடத்
தப்பட்ட இந்தச் சோதனையில் 5 ஆடவர்கள் கைது செய்யப்பட் டுள்ளனர்.
ஜொகூர்பாரு ஜாலான் டத்தோ ஜாபாரில் உள்ள வீட்டில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் 5.7 கிலோ கெத்தாமின் ரக போதைப் பொருளும் 4,250 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பாக 32 வயது சீன ஆடவர் ஒருவர் கைது செய்யப்
பட்டுள்ளார். அதே நேரத்தில் ஜொகூர்பாரு ஜாலான் லார்க்கினில் உள்ள வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 500 கிராம் கெத்தாமின் ரக போதைப்பொருளும் 292 எக்ஸ்டஸி மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக 33 வயது சீன ஆடவர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மூன்றாவது சோதனை நடவடிக்கையாக ஜொகூர்பாரு தாமான் புக்கிட் இண்டாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 30 வயது சீன ஆடவர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தார் என்று சோதனையில் தெரிய வந்துள்ளது.
அதேபோல் ஜொகூர் பூலாயில் உள்ள தாமன் சைன் டெக்ஸில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 53 வயது ஆடவர் ஒருவர் போதைப்பொருள் உட்கொண்ட குற்றத்திற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் 28 வயது ஆடவர் ஒருவரும் போதைப்பொருள் உட்கொண்ட குற்றத்திற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சோதனை நடவடிக்கை யில் பறிமுதல் செய்யப்பட்ட மொத்த போதைப் பொருளின் மதிப்பு வெ. 319,510 ஆகும்.
இந்த 5 ஆடவர்களும் விசார ணைக்காக 3 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + 8 =