போதைப்பொருள் உட்கொண்ட 12 மீனவர்கள் கைது

0

மலேசிய கடல் அமலாக்க ஏஜென்சி (ஏபிஎம்எம்),தேசிய போதைப்பொருள் ஒழிப்பு ஏஜென்சி (ஏஏடிகே) மற்றும் அரச மலேசிய போலீஸ்படை (பிடிஆர்எம்) இணைந்து பினாங்கு நீரிணையில் நடத்திய சோதனையில் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். தடுத்து வைக்கப்பட்ட அனைவரும் கஞ்சா, ஷாபு வகை போதைப்பொருள்களை உட்கொள்வதாக பினாங்கு ஏபிஎம்எம் இயக்குநர் கேப்டன் மரிழம் ஹமிஸான் ஹருண் கூறினார். காலை 8மணி தொடங்கி 2மணி வரை நடைபெற்ற நடவடிக்கையின்போது 46 மீனவர்கள் மீது சோதனை மேற்கொள்ளப்பட்டதாக ஹமிஸான் ஹருண் கூறினார்.
இச்சம்பவம் குறித்து அபாயகரப் போதைப்பொருள் சட்டம் 1952 செக்ஷன் 15(1)(ய)இன் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here