பொருளாதார மீட்சிக்கானத் துல்லியமான தடத்தில் மலேசியா உள்ளது

நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் மீட்சியடையச் செய்வதற்கானப் தடத்தில் மலேசியா உள்ளது என்று பிரதமர், டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
கோவிட் தொற்றுக் காரணத்தினால் இதுநாள் வரை வெளிநாடுகளுடன் உறவுக் கொள்ள முடியாமல் இருந்தது.
இதில் உறவுகளை இன்னும் வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் தாய்லாந்து, புருணை, சிங்கப்பூர் போன்ற ஆசியான் நாடுகளுக்கும் காதார், ஐக்கிய அரபு சிற்றரசு போன்ற மத்தியக் கிழக்கு நாடுகளுக்கும் அவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
திட்டமிட்டபடிப் பொருளாதார மீட்சிக்கானச் செயல்முறைக்கு உதவ அந்நிய முதலீடுகளைக் கவர்வதற்கு இது மிகவும் முக்கியமாகும்.
நாடு மற்றும் மக்களின் நல்வாழ்விற்கு உத்தரவாதமளிக்க ஒரு பெரியக் கடமையாகக் கருதப்படும் இச்செயல்முறையில் எந்த இடையூறுகளையும் அரசு காண விரும்பவில்லை என்று டோஹாவில் நடைபெற்ற மலேசியக் குடும்பத்தினருடனானச் சந்திப்பு நிகழ்வில் உரையாற்றிய போது பெரா நாடாளுமன்ற உறுப்பினருமான இஸ்மாயில் சப்ரி யாக்கோப் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + two =