பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படுவது சந்தேகமே!

கோவிட்-19 நோய் தாக்கத் தினால் பல தொழில்துறைகள் சரிவை அடைந்துள்ளதால், அதனைச் சீர் செய்ய பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவிக்க திட்டமிடப் பட்டிருந்தது.

ஆனால், தற்போதைய இழுபறி யான அரசியல் சூழ்நிலையில், அது நடக்க வாய்ப்பில்லை எனத் தெரிவதாக அனைத்துலக வர்த்தகம், தொழிற்துறையின் முன்னாள் துணையமைச்சரான ஓங் கியான் மிங் தெரிவித்தார். இன்று அமைச்சர்கள் அனைவரும் தங்கள் துறைக்கான திட்டங்களை அறிவித்து விவாதிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங், அது பற்றிப் பிரதமரிடம் விளக்கமளித்திருக்க வேண்டும். ஆனால், அரசியல் இழுபறியினாலும் துன் மகாதீர் பிரதமர் பதவியிலிருந்து விலகியதாலும் அது நடைபெறாமல் போனது.

மேலும் அது வியாழக்கிழமை அறிவிக்க முடியாமல் போகும். அன்றைய தினம் பிரதமர் அதனை அறிவிப்பதாக இருந்தது.நேற்று முன்தினம் மகாதீர் பிரதமர் பதவியிலிருந்து விலகிய பின்னர் அவரின் அமைச்சரவையும் கலைக்கப்பட்டது.

மகாதீரின் விலகலை ஏற்றுக் கொண்ட பேரரசர், புதிய ஆட்சி அமைக்கப்படும் வரை அவரே இடைக்காலப் பிரதமராக இருக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளதாக அரசின் தலைமைச் செயலாளர் முகமட் ஸுக்கி அலி தெரிவித்தார். மேலும், பிரதமர் பதவி விலகியதோடு, அவரின் அமைச்சரவையும் கலைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

எனவே, தற்போது நாட்டில் அரசாங்கம் செயல்படவில்லை என்பதே உண்மையாகும். மகாதீர் வழக்கம் போல தமது கடமையை ஆற்றலாம் ஆனால் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை அறிவிப்பது சந்தேகமே.
.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − sixteen =