பொருளாதார உயர்வுக்கு ஏற்றவாறு வரி விதிப்பு அமையும்

0

நாட்டில் பொருளாதார பரிமாணத்துக்கு ஏற்றவாறு வரி வசூலிப்பு இல்லாதிருப்பதால், நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு வரி விதிப்பின் விகிதாசாரம் அதிகரிக்கப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார பரிமாணம் 1.35 டிரில்லியன் ரிங்கிட்டாக ( 1 டிரில்லியன் = ஒரு லட்சம் கோடி) இருக்கும்போது, 2019 ஆண்டில் 14,500 கோடி ரிங்கிட் வரியாக வசூலிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
உலக வங்கியின் 2017ஆம் ஆண்டு அறிக்கையின்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மலேசியா வரியாக 13.1 விழுக்காட்டை வசூலித்திருப்பதாகக் குறிப்பிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். ஆனால், வியட்நாம் 19 விழுக்காடும், சிலி 17.4 விழுக்காடும், போலந்து 16.8 விழுக்காடும் கொரியா 15.4 விழுக்காட்டையும் வசூலித்ததாக அது குறிப்பிட்டுள்ளது.
வரி ஊக்குவிப்பு அளித்தல், குறைவான வரி வசூலிப்பு மற்றும் வரியைச் செலுத்தத் தவறும் காரணங்களினால் வரி வசூலிப்பு குறைவாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
வரியின் விகிதாசாரம் அதிகமாக இருந்தால் பொதுமக்கள் புகார் தெரிவிப்பர், குறைவாக இருந்தால் அது பற்றி கேள்வி எழுப்பப்படுகிறது. எனவே, மக்களைப் பாதிக்காத வகையில் வரி வசூலிப்பை அரசு கட்டுப்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார். கடந்தாண்டு அடையப்பெற்ற மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.7 விழுக்காடாக இருந்த வேளையில் அது இவ்வாண்டு 4.8 விழுக்காடாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொருளாதார பரிமாணம் 1.6 டிரில்லியனாகவும் இருக்கும் வேளையில் வருமானம் இல்லாத வரி வசூலிப்பு 800 கோடி ரிங்கிட் உட்பட 145,000 கோடி வரியை வசூலிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக லிம் குவான் எங் தெரிவித்தார்.
இதனிடையே,கடந்தாண்டை விட இவ்வாண்டு 15,460 கோடி ரிங்கிட் வரியை வசூலிக்க முடியும் என வருமான வரி வாரியம் கணித்திருப்பதாக லிம் குவான் எங் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + fourteen =