பொய்ச்செய்தி மசோதாவை ரத்து செய்ய மீண்டும் தீர்மானம்

0

2018ஆம் ஆண்டின் பொய்ச் செய்தி மீதான தடுப்பு சட்ட மசோதாவை ரத்து செய்ய அது மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதன் முறையாக கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி அது தாக்கல் செய்யப்பட்டபோது, மேலவை அதை நிராகரித்ததால் அது தோல்வியடைந்தது.
அப்போது இந்த மசோதாவை ரத்து செய்யும் தீர்மானத்துக்கு 21 பேர் ஆதரவாகவும் 28 பேர் எதிராகவும் வாக்களித்தனர். மூவர் வரவில்லை. நஜிப் காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்த பொய்ச்செய்தி தடுப்புச் சட்டத்தை அகற்ற பக்காத்தான் முயன்று வருகிறது.
மீண்டும் இந்தத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக பிரதமர்துறை அமைச்சர் லியூ வுய் கியோங் கூறினார். இந்தச் சட்டம் முழுமையாக அகற்றப்படுவதற்குப் பதில் அது திருத்தப்படலாம் என்றும் பிரதமர் துன் மகாதீர் இந்த மாதத் தொடக்கத்தில் கோடிகாட்டியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 3 =