பொது மருத்துவமனைகளில் அதிகமான படுக்கைகள் காலியாகவே உள்ளன


அரசாங்க மருத்துவனைகளில் உள்ள தீவிரக் கவனிப்பு அறைகளில் (ஐ.சி.யூ.) 90 விழுக்காடு படுக்கைகளில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இன்னும் பத்து விழுக்காடு படுக்கைகள் இன்னும் காலியாகவே உள்ளன என்று சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் அடாம் பாபா நேற்று தெரிவித்தார். மே 25ஆம் தேதி ஐ.சி.யூ. படுக்கைகளில் 96 விழுக்காடு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் ஜூன் 6ஆம் தேதி அது 106ஆக உயர்வு கண்டது என்றும் சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா நேற்றுமுன்தினம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில், டாக்டர் அடாம் பாபா கொடுத்துள்ள புள்ளிவிவரம் சற்று முரண்பாடாக உள்ளது.
ஐ.சி.யூ. அறைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், நெருக்கடியான நிலையில் உள்ள அனைத்து நோயாளிகளையும் அங்கு அனுமதிக்க முடியாமல் உள்ளது என்று நூர் ஹிஷாம் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், ஐ.சி.யூ. அறைகளில் நோயாளி களின் எண்ணிக்கை குறைந் துள்ளதால், பத்து விழுக்காடு படுக்கைகள் காலியாக உள்ளன என்று டாக்டர் அடாம் பாபா குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 9 =