பொது இடங்களில் மது அருந்தத் தடையில்லை

0

பொது இடங்களில் மது அருந்துவதற்கு சிலாங்கூர் அரசு தடையேதும் விதிக்கவில்லை என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் பொதுப் போக்குவரத்து மற்றும் கிராமப்புற மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளருமான இங் ஸீ ஹான் தெரிவித்தார்.
இச்சட்டமான

து மாநில அரசின் 2005ஆம் ஆண்டு சிறு சட்டப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. பொது இடங்களில் மது அருந்துவதற்கு மாநில அரசு தடைவிதிக்காவிடினும், மது அருந்திவிட்டு தகராறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


மது அருந்திவிட்டு தகாத காரியங்கள் செய்பவர்கள் மீது காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கும் மாநில அரசு பெரும் ஒத்துழைப்பு நல்குகிறது. ஏனெனில் தாமான் உள்ளிட்ட பெரும்பாலான குடியிருப்புப் பகுதிகளில் ‘பிபிடி’ எனப்படும் ரோந்துப் பணியாளர்கள் மது அருந்திவிட்டு யாரும் தகராறு செய்கிறார்களா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அப்படி தகராறு செய்தால் உடனே காவல்துறைக்கும் தகவல் கூறுகிறார்கள் என்றார் அவர்.

அதேபோல் குடியிருப்புப் பகுதிகளில் இது போன்ற விவகாரங்களைக் களைவதற்கு தாமான்களில் மது அருந்துவதற்கு தடைவிதிப்பதற்கான அறிவிப்புப் பலகைகளைப் பொருத்தும் நடவடிக்கைகளும் ஆங்காங்கே முடுக்கி விடப்பட்டுள்ளன.
பொது இடங்களில் மட்டுமே மது அருந்துவதற்குத் தடையில்லை என்றாலும் பள்ளிவாசல், சீனக் கோயில், இந்து ஆலயம், அரசு அலுவலகம், பள்ளி, மருத்துவமனை, வீடமைப்புப் பகுதி ஆகிய இடங்களில் மது அருந்துவதற்கு கட்டாயத் தடையையும் மாநில அரசு விதித்துள்ளதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here