பொதுமுடக்கத்தை எதிர்கொள்ள வெ.551.56 மில்லியன் உதவித் திட்டம்…


நாடு எதிர்நோக்கி வரும் கோவிட் பெருந் தொற்றின் எதிரொலியால் மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் பொது முடக்கத்தை எதிர்கொள்ள 551.56 மில்லியன் வெள்ளி உதவித் திட்டத்தை மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். 25 திட்டங்களை உள்ளடக்கிய இந்தப் பெரும் திட்டத்தில் சிலாங்கூர் மக்கள் பயனடையும் நோக்கத்தில் 2.0 எனும் அடிப்படையில் இவை அனைத்தும் முறையாக மக்களைச் சென்றடையும் என்றும் அவர் கூறினார்.
கோவிட் பெருந் தொற்றின் காரணமாக வாழ்வாதாரம் இழந்து தொழில் மற்றும் வியாபாரம் ஏதும் செய்ய முடியாமல் சிரமத்தில் இருப்போருக்கும் இதன் மூலம் உதவிகள் வழங்கப்படும். வறுமைக் கோட்டில் அவதிப்படும் மக்களின் துயரைக் களைய உணவுக் கூடைகள் சட்டமன்றத் தொகுதிகள் வாயிலாக இவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்றார். மேலும் 2632 பி பிஆர் வாடகை வீடு களில் குடியிருப்போர் எதிர்நோக்கி வரும் வாடகைக் பிரச்சினை கள் உடனடியாக தீர்த்து வைக்கப்படும். மாநில த்தில் இருக்கும் 8ஆயிரம் வியாபாரிகளின் நிதிச் சுமைகளுக்கும் விரைவில் சரியான தீர்வு காணப்படும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் தெரிவித்தார். இங்கு டேவான் ஜூப்லி பேராக் மண்டபத்தில் இந்த மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுத்து பேசிய அவர் பத்திரிகை யாளர்கள் சந்திப்பில் இந்த விவரங்களை வெளியிட்டார். இதற்கான சுற்றறிக்கை கள் சட்டமன்றம் மற்றும் அரசு இலாகாக்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven − four =