பொதுமன்னிப்பு காலம் நீட்டிக்கப்பட வேண்டும்!

முடிவுறும் ‘பேக்ஃபோர் கூட்’(க்ஷயஉம கடிச படிடின) எனப்படும் பொது மன்னிப்பு திட்டத்திற்கான காலக்கெடுவை அரசாங்கம் நீட்டிக்க வேண்டும் என்று மலேசியாவிலுள்ள நைஜீரியர்களை பிரதிநிதிக்கும் அரசு சாரா இயக்கமான ‘நிடோ மையின்’ பேச்சாளரான அஹ்மட் அடிபாஞ்ஜோ கேட்டுக் கொண்டார்.
கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டம், மக்கள் அதிகபட்சம் பிரயாணம் செய்யும் காலகட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளதால் டிக்கெட்டுகளின் விலை அதிகமாக உள்ளது என்றும் அஹ்மட் அடிபாஞ்ஜோ கூறினார். பல நைஜீரியர்கள் தாயகம் திரும்பிவிட்ட வேளையில் கோலாலம்பூரிலிருந்து லாகோஸிற்கு டிக்கெட் வாங்க இயலாத நிலையிலுள்ள சுமார் 1,000 பேர் நிடே-மையின் உதவியை நாடியுள்ளதாக அஹ்மட் அடிபாஞ்ஜோ தெரிவித்தார். அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு மேல் இங்கு தங்கியிருந்த பல நைஜீரியர்கள் தாயகம் திரும்பும் ஆவலில் உள்ளதாக அடிபாஞ்ஜோ தெரிவித்தார். இங்கு அவர்கள் சட்டப்பூர்வமாக வேலை செய்ய இயலாததால் வாழ்க்கைச் செலவினங்களை சமாளிப்பதற்கு போதிய வருவாயை ஈட்ட இயலாத நிலையில் உள்ளனர். இங்கு பலர் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் நாட்டை விட்டு வெளியேறவே விரும்புகின்றனர். எனினும் அபராதத் தொகையான 700 வெள்ளியை செலுத்திய பின்னர் அதிகபட்ச விலையில் எவ்வாறு அவர்களால் டிக்கெட் வாங்க இயலும் என்றார் அடிபாஞ்ஜோ. அதிகபட்ச பயண காலத்திற்குப் பின்னும் பொதுமன்னிப்பு காலத்தை நீட்டிப்பது குறித்து அரசாங்கம் யோசனை செய்ய வேண்டும் என்று அடிபாஞ்ஜோ கோரிக்கை விடுத்துள்ளார். ‘நிடோ-மையின்’ கணிப்புப்படி 30,000 நைஜீரியர்கள் மலேசியாவில் உள்ளனர். இவர்களில் எத்தனை பேருக்கு உரிய பயண ஆவணங்கள் உள்ளன என்பது தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × one =