பொதுத்தேர்தலை எதிர்கொள்ள மூடா கட்சி அனைத்து எதிர்க்கட்சிகளோடும் கலந்தாய்வு

15ஆவது பொதுத்தேர்தலை எதிர்கொள்ள மூடா கட்சி அனைத்து எதிர்க்கட்சிகளோடும் கலந்தாய்வு நடத்தி வருவதாக அதன் இணை தோற்றுநர் டாக்டர் தனுஷா பிரான்சிஸ் சேவியர் தெரிவித்தார்.இளைஞர் கட்சியான மூடாவை அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய சங்கங்களின் பதிவகம் மறுத்து வரும் வேளையில், அதனை எதிர்த்து நீதிமன்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தாங்கள் வாரிசான் சபாவின் தலைவர் ஷாபி அப்டால், அமானா நெகாராவின் தலைவர் முகமட் சாபு, ஜசெக செயலாளர் லிம் குவான் எங் ஆகியோரை சந்தித்திருப்பதாகவும் இவ்வாரம் பெஜுவாங்கின் தலைவர் துன் மகாதீர், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமையும் சந்திக்கவிருப்பதாக அவர் தெரிவித்தார். பொதுத்தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் வேளையில், மூடா அதில் பங்கெடுத்துக் கொள்ளும் வகையில் ஒத்துழைப்பு தேவைப்படுவதாகவும், எதிர்க்கட்சிகள் தங்களுக்கு ஒத்துழைப்பை அளிப்பார்கள் என்று நம்புவதாக தனுஷா தெரிவித்தார். பக்காத்தான் ஹராப்பானோடு இணையும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. ஆனால், எதிர்க்கட்சிகள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த மூடா முனைவதாக அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + 4 =