பேருந்து நிலையங்களில் ‘இ-வாலட்ஸ்’ முறை பயன்படுத்தப்படும்

0

நாட்டில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலும் ரொக்கம் பயன்படுத்தாமல் ‘இ – வாலட்ஸ்’ (ந-றயடடநவள) முறை பயன்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.
ஒருங்கிணைக்கப்பட்ட மத்திய டிக்கெட் முறை பல பேருந்து நிலையங்களில் இன்னும் அமலில் இல்லாததால் இந்த இ – வாலட்ஸ் முறை கட்டங்கட்டமாக நடைமுறைக்கு வரும் என்றார் அவர். பேருந்து நிறுவனங்கள் குறிப்பாக அரசாங்கத் திடமிருந்து உதவித் தொகை பெறும் பேருந்து நிறுவனங்கள் பணமில்லா டிக்கெட் முறையை அமல்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
சில பெரிய பேருந்து நிலையங்கள் இந்த இ – வாலட்ஸ் முறையை செயல்பாட்டில் கொண்டுள்ளதாகவும் சில விரைவுப் பேருந்து நிறுவனங்களும் இம்முறையை அமலுக்குக் கொண்டு வரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று சீனப் புத்தாண்டை முன்னிட்டு இங்குள்ள ‘டிபிஎஸ்’ நிலையத்தில் ‘பாலேக் கம்போங்’ பயணத்தைக் கண்காணிக்க வருகை புரிந்த பின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here