பேரா கெஅடிலான் தலைவர் பார்ஹாஷ் காவல்துறையில் சரண்

0

பேரா மாநில கெடிலான் தலைவரும் டத்தோஸ்ரீ அன்வாரின் அரசியல் செயலாளருமான பார்ஹாஷ் வாபா சல்வடோர் ரிஸால் முபாரக் நேற்று காலை அம்பாங் ஜெயா காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
அண்மையில் நடந்த ஒரு சண்டை சச்சரவு தொடர்பில் விசாரணைக்கு அவர் தேடப்பட்டு வந்தார். எனினும் நேற்று காலை 10.00 மணியளவில் சரணடைந்த அவர், விசாரணைக்குப் பிறகு மாலை 5.00 மணியளவில் காவல்துறை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
அவர் மீதான விசாரணை முடிவடைந்து விட்டது. இந்த அறிக்கை அரசு தரப்பு விசாரணைப் பிரிவுக்கு அனுப்பப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என சிலாங்கூர் மாநில குற்றவியல் புலன் விசாரணைப் பிரிவுத் தலைவர் பாட்ஸில் அமாட் கூறினார்.
கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி அம்பாங், தாமான் டாஹாங் விளையாட்டு வளாகத்தில் நடந்த சண்டை தொடர்பில் அவர் தேடப்பட்டு வந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 − 3 =