பேராவில் 30 சிக்குன்யா காய்ச்சல் சம்பவங்கள் பதிவு

0

இவ்வாண்டு தொடக்கம் முதல் கடந்த புதன்கிழமை வரை சுகாதார அமைச்சு மேற்கொண்ட ஆய்வில் பேராவில் இதுவரை சிக்குன்யா காய்ச்சல் கண்டவர்களின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது என்று அம்மாநில சுகாதார பிரிவுத் தலைவர் டத்தோ டாக்டர் டிங் லாய் மிங் தெரிவித்தார்.
இதுகுறித்து 17 இடங்கள் அடையாளம் காணப்பட்டு அந்த இடங்களில் கொசுக்களை கொல்வதற்காக தொடர்ந்து புகையடிக்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டு இந்த எண்ணிக்கை 635ஆக உயர்வு கண்டிருந்தது. அப்போது மாநில மக்களிடையே கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் மாநில அரசு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதையும் அவர் கோடி காட்டினார்.இந்த சம்பவங்கள் அதிகரித்திருந்தாலும் கூட இதுவரை எவ்வித மரணச் சம்பவமும் பதிவாகவில்லை. எனவே, பொதுமக்கள் கூடுமான வரை சிக்குன்யா காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை எந்நேரமும் கொண்டிருத்தல் அவசியமாகும் என்றார் அவர்.
ஏடிஸ் கொசுக்களை ஒழிப்பதற்கு பொதுமக்கள் எவ்வகையான யுக்திகளையும், நடவடிக்கைகளையும் கையாள்கிறார்களோ அதே முக்கியத்துவத்தை சிக்குன்யா காய்ச்சலிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்கும் அவர்கள் வழங்க வேண்டும். கூடுமானவரை சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கால்வாய்களில் நீர் அடைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
காலியான கலன்களில் நீர் பிடித்து வைத்தால், அதை முறையாக மூடி வைக்க வேண்டும் என்று அவர் தமது அறிக்கையில் ஆலோசனை கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + 13 =