பேராசிரியர் ராமசாமி உட்பட நால்வர் மன்னிப்பு கேட்க 48 மணிநேர கெடு;

கோலாலம்பூர், ஆக. 20-
தம்மிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மனிதவள அமைச்சர் எம்.குலசேகரனுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பிய ஸக்கீர் நாயக், மேலும் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் ராமசாமி உட்பட 4 தலைவர்களுக்கு இதே நோட்டீஸ்களை அனுப்பியிருக்கிறார்.அடுத்த 48 மணிநேரத்தில் தம்மிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தமக்கு கணிசமான இழப்பீடு தரவேண்டும் என்றும் அவர் அதில் கூறியிருக்கிறார்.
பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி, கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகோ, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் முனியாண்டி, முன்னாள் தூதர் டெனிஷ் ஜே.இக்னேசியஸ் ஆகியோருக்கு இந்த வழக்கறிஞர் நோட்டீஸை இவர் அனுப்பியிருக்கிறார்.
’அக்பர் டீன் அன்ட் கோ என்ற வழக்கறிஞர் நிறுவனம் ஆகஸ்ட் 19 என்று தேதியிட்ட அக்கடிதங்களை அனுப்பியிருக்கிறது. தம்மைக் களங்கப்படுத்தியதாகவும் தம்மை அவதூறு செய்து அறிக்கை வெளியிட்டதாகவும் தீய நோக்கத்துடன் தம்மீது வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகவும் அடிப்படையற்ற ஜோடிக்கப்பட்ட உண்மையில்லாத செய்திகளை வெளியிட்டதாகவும் அவர் அந்த வழக்கு மனுவில் கூறியிருக்கிறார்.
48 மணிநேரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கைத் தொடர்வேன் என்று அவர் கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + 18 =