பேராசிரியர் டத்தோ டேனி வோங் நமக்கு கிடைத்த பொக்கிஷம் ஓம்ஸ் பா.தியாகராஜன் பாராட்டு

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக தங்கப் பதக்கம் வழங்கும் இந்த நிகழ்விற்கு நான் வந்து கொண்டிருக்கின்றேன். ஆனால், இந்தப் பாராட்டினைப் பெறுபவர்கள் எத்தனை பேர் மீண்டும் சமுதாயத்திற்கு தங்களுடைய சேவையை வழங்குகிறார்கள் என்பதை அறிய ஆவலாக இருக்கின்றேன் என்று தமதுரையில் ஓம்ஸ் பா. தியாகராஜன் கூறினார். மேலும், பலன்களை எதிர்ப்பார்த்து நாம் இந்த காரியங்களை செய்வதில்லை. ஆனால், இந்த சமுதாயத்திற்கு அதிகமான தேவைகள் இருக்கின்றன. அதனை ஓரளவாவது இங்கு பதக்கம் பெறும் பட்டதாரிகள் நிறைவேற்ற வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன் என்று அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து கலைப்புல டீன் பேராசிரியர் டேனி வோங் நமக்கு கிடத்த ஒரு பொக்கிஷம் என்று புகழ்ந்துரைத்தார். காரணம் இந்திய ஆய்வியல் துறையின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு அவர் செயல்படுகின்றார். என்வேதான் இந்திய ஆய்வியல் துறையில் அறக்கட்டளைகள் நிறுவப்படுவதை ஆதரிப்பதுடன் அதற்கு நல்ல பல ஆலோசனைகளும் வழங்கி வருகிறார். இதுநாள் வரையில் இந்திய ஆய்வியல் துறையில் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமசுந்தரம் அறக்கட்டளை, ஓம்ஸ் பா. தியாகராஜன் அறக்கட்டளை மற்றும் தமிழவேள் கோ. சாரங்கபாணி அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளன. இந்த அறக்கட்டளைகள் அமைவதற்கு மிகுந்த ஒத்துழைப்பினை பேராசிரியர் டத்தோ டேனி வோங் வழங்கி வருவது பாராட்டுக்குரியதாகும் என்றும் ஓம்ஸ் பா. தியாகராஜன் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 − 2 =