பேராக் மாநில இந்திய பி40 மாணவர்களுக்கு 10 லட்சம் நிதி ஒதுக்கீடு சென்றடைய வேண்டும்

பேராக் மாநிலத்தில் உள்ள பொருளாதார வசதியற்ற இந்திய மாணவர்களுக்காக கடந்த 2020 ஆம் ஆண்டில் 1 மில்லியன் வெள்ளி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதா? அந்த நிதி முழுமையாக நம் மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு மாநில மந்திரி பெசார் டத்தோ சரானி இந்திய சமூகத்திடம் விளக்கம் அளிப்பது அவருடைய கடமை என்றும் தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த பணி ஓய்வுபெற்ற முன்னாள் தலைமையாசிரியர்கள் மற்றும் தமிழ் மொழி ஆர்வலர்களும் எதிர்பார்க் கின்றனர். இந்நிலையில், இவ்வாண்டுக்கான (2021) 1 மில்லியன் நிதி மாநில இந்திய மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது என்று மந்திரி பெசார் சரானியின் செயலாளராக இந்தியர்களின் சார்பில் நியமனம் செய்துள்ள டத்தோ இளங்கோ வடிவேலு அறிவித்துள்ள செய்தியால் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இந்திய மாணவர்களுக்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மந்திரி பெசாரே காரணம் என இளங்கோ குறிப்பிட்டுள்ளார். அந்நிலையில், இளங்கோ அறிவித்துள்ள நிதி எந்த ஆண்டுக்கானது என்றும், எப்போது மாணவர் களுக்கு வழங்கப்படும் என சமூகத்திடம் அவர் எடுத்துரைக்கவில்லை. இந்நிலையில், இந்த மாநில அரசின் நிதியை தாண்டி பேராக் மாநில இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக மாநில அரசு வழங்கிய 2000 ஏக்கர் கல்வித் தோட்டத்தில் விளையும் செம்பனை வருமானத்தின் மூலமாக கல்வி நிதியானது இனி காலம் கடத்தாமல் விரைந்து கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது என்றும் இரட்டிப்பு மகிழ்ச்சியை இளங்கோ வெளிபடுத்தியுள்ளார் என்பது பாராட்டுக்குரியது. 2,000 ஏக்கர் நிலம் பேரா மாநில இந்திய சமூகத்தினர் அனை வருக்கும் சொந்தமானது என்ற ஓர் உண்மையை மனம் திறந்து உறுதிபட இளங்கோ பேசியுள்ளார். இதிலிருந்து என்ன தகவல் சேகரிக்க முடிந்தது என்றால்? அந்த நிலம் பேரா அரசுக்கு சொந்தமானது என்றும், அந்த நிலத்தை அரசுக்கு தெரியாமல் விற்பதோ அல்லது வேறொரு பெயருக்கு மாற்றம் செய்வதோ முடியாதக் காரியம் என்பது தெளிவாகிவிட்டது. இந்நிலையில், பணி ஓய்வு பெற்ற தமிழ்ப் பள்ளியின் முன்னாள் ஆசிரியர்கள் எஸ்.கிருஷ்ணன், பொன்.சுப்ரமணியம், பி.பெருமாள், முனுசாமி, இராஜகோபால் ஆகியோர் பேரா அரசுக்கு நன்றியைத் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 4 =