பேராக் மாநில அரசாங்கத்தில் மாற்றமில்லை

நாட்டில் பதற்றமான அரசியல் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், பேராக் மாநில அரசாங்கத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று பேராக் மந்திரி பெசார் அறிவித்துள்ளார்.

அமானா கட்சியின் நிர்வாக உறுப்பினர் டத்தோஸ்ரீ முகமட் நிஸார் ஜமாலுதின், மத்திய அரசாங்க மட்டத்தில் எம்.பி.க்கள் பக்காத்தான் ஹராப்பனில் இருந்து விலகியிருந்தாலும் மாநில அரசாங்கம் பாதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

பிரிபூமி கட்சியைச் சேர்ந்த டத்தோஸ்ரீ அமாட் பைஸால் அஸுமு அதிகாரப்பூர்வமாக இன்னும் மந்திரி பெசாரைச் சந்திக்கவில்லை என்று நிஸார் கூறினார். “பெர்சத்துவிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் பக்காத்தானை விட்டு வெளியேறினால், நிலைமை வேறுபட்டதாக இருக்கும்.”

“இப்போதைக்கு மாநில நிர்வாகம் மந்திரி பெசார் மற்றும் அனைத்து மாநில நிர்வாக கவுன்சிலர்களுடன் இயங்குகிறது,” என்று அவர் மேலும் கூறினார். பேராக் பி.கே.ஆர். துணைத் தலைவர் பல்டிப் சிங், இதுவரை மாநில அளவில் நிலைப்பாடு, தற்போதைய நிலையை நிலை நாட்டும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பெர்சத்து சட்டமன்ற உறுப்பினர்களை அவர்கள் இன்னும் சந்திக்கவில்லை என்றும் கூறினார்.

“ஓரிரு நாட்களில், மாநில பக்காத்தான் மன்ற உறுப்பினர்களுடனும் நாங்கள் சந்திப்போம் என்று நம்புகிறோம்.” “எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் உட்கார்ந்து பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பது முக்கியம். இருப்பினும், மலாய் ஆட்சியாளர்கள் இன்று மாட்சிமை தங்கிய மாமன்னரை சந்திக்கும் வரை நாங்கள் காத்திருப்போம்“ என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven + four =