பேராக் மந்திரி பெசார்… கேம்ரி காருக்குப் பதிலாக லெக்சஸ் காரை மாற்றிக் கொண்டார்

0

பேராக் மந்திரி பெசார் அமாட் ஃபைசால் அஸுமு தாம் பயன்படுத்தி வந்த தொயோத்தா கேம்ரி காருக்குப் பதிலாக லெக்சஸ் காரை பயன்படுத்தியது தெரியவந்தது. ஜூன் 24ஆம் தேதி அவர் மெத்தடிஸ்ட் பெண்கள் இடைநிலைப்பள்ளி, சான் தெட் இடைநிலைப்பள்ளி ஆகியவற்றுக்கு வருகை தந்தபோது, லெக்சஸ் காரைப் பயன்படுத்தியுள்ளார். காரை மாற்றிக் கொண்டது பற்றிக் குறிப்பிட்ட அவர், 2019ஆம் ஆண்டு காரான லெக்சஸ்ஸுக்கு 40லிருந்து 50 விழுக்காடு வரை கழிவு கிடைத்திருப்பதாகத் தெரிவித்தார். அதன் முந்தைய விலையான 3 லட்சத்திலிருந்து 2 லட்சமாகக் குறைக்கப்பட்டதால், அதனை அரசின் பயன்பாட்டுக்கு வாங்கியதாகவும் அவர் தெரிவித்தார். பழைய கேம்ரி கார் ஆட்சிக்குழு உறுப்பினர் ஒருவருக்குத் தரப்பட்டிருப் பதாகவும் அவர் தெரிவித்தார். கடந்தாண்டு பக்காத்தான் ஹராப்பானின் கீழ் மாநில அரசு இருந்தபோது, 16 கேம்ரி கார்களை ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பயன்பாட்டுக்காக வாங்கியது. தற்போது பயன்பாட்டில் இல்லாத கார்களை டெண்டர் மூலம் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + fourteen =