பேராக் மந்திரி பெசார் எங்களை புறக்கணிக்கிறார்; மஇகா, மசீச குற்றச்சாட்டு

பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமாட் பைஸால் அஸுமு தங்களைப் புறக்கணிப்பதாக மஇகா, மசீச இளைஞர் பிரிவு குற்றஞ் சாட்டியுள்ளது.
பேராக் மாநில மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் எஸ்.ஜெயகணேஷ், மசீச இளைஞர் பிரிவுத் தலைவர் டேனியல் வாய் ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளனர்.
பேராக் மாநிலத்தில் உள்ள சீன, இந்திய சமூகங்களை நாங்கள் பிரதிநிதிக்கிறோம்.
தேசிய முன்னணியைச் சேர்ந்த எங்களை மந்திரி பெசார் அமாட் பைஸால் ஓரங்கட்டுகிறார்.
இவ்விரு கட்சிகளையும் அவர் அங்கீகரிப்பதில்லை. இதனால் நாங்கள் அவர்மீது வெறுப்படைந்திருக்கிறோம் என அவர்கள் தெரிவித்தனர்.
பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் 22 மாதங்கள் மந்திரி பெசாராக இருந்த அவர், இப்போது பெரிக்காத்தான் ஆட்சியில் அதே பதவியில் நீடிக்கிறார்.
பேராக்கில் சீனர், இந்தியர் மேம்பாடு மற்றும் சமூகநலத்திற்காக அவர் எந்தவொரு திட்டத்தையும் வகுக்கவில்லை என அவர்கள் சாடினர்.
அவர் என்ன நோக்கத்தில் செயல்படுகிறார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை என அவர்கள் குறிப்பிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − 9 =