பேராக் கல்வித் தோட்டம் மஇகா முயற்சியால் பெறப்பட்டதாம் டத்தோ வி.இளங்கோ

பேராக்கில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பேராக் மாநில இந்தியர்களின் கல்வி மேம்பாட்டுக்காக உருவாக் கப்பட்டிருக்கும் “கல்வித் தோட்டம்” குறித்து பேராக் மாநில மஇகா தலைவரும், பேராக் மாநில மந்திரி பெசாரின் இந்தியர்களுக்கான செயலாளருமான டத்தோ வி. இளங்கோ ஒரு செய்தியாளர்கள் கூட்டத்தில் விளக்கமளித்துள்ளார். 2009-ஆம் ஆண்டில் பேராக் மந்திரி பெசாராகப் பதவியேற்ற டத்தோஸ்ரீ சாம்ரி அப்துல் காதிர் மஇகாவின் பரிந்துரைகள், முயற்சிகள் காரணமாக பேராக் மாநில இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக 2,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை வழங்கினார் என்று அவர் கூறியுள்ளார். பேராக் மாநில இந்திய சமூகத்தினர் தங்களின் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காக நிதிப் பற்றாக்குறையை எதிர் நோக்குகின்றனர் என்பதை உணர்ந்து கொண்ட டத்தோஸ்ரீ சாம்ரி அந்த நோக்கத்திற்காகவே இந்த நிலத்தை இந்திய சமுதாயத்திற்கென ஒதுக்கீடு செய்தார். அப்போதைய பேராக் மாநில மஇகா தலைவராக இருந்த டான்ஸ்ரீ வீரசிங்கமும், மற்ற மஇகா பொறுப்பாளர்களும் இந்தத் திட்டத்திற்காக பலவிதங்களிலும் பாடுபட்டனர்.இந்த நிலத்தை முறையாக நிர்வகிக்க அறவாரியம் ஒன்றும் அமைக்கப்பட்டது. அந்த அறவாரியத்தின் தலைவராக பேராக் மாநிலத் தமிழ்ப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மன்றத்தின் முன்னாள் தலைவரான முனியாண்டி பணியாற்றி வருகிறார்.தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம் வழங்கிய கடன், நிலத்தை மேம்படுத்த அவர்கள் புரிந்த உதவிகள், ஆகியவற்றின் பலனாக தற்போது கல்வித் தோட்டம் திட்டமிட்டபடி வெற்றிகரமாக உருவாகி வருமானத்தையும் ஈட்டத் தொடங்கியிருக்கிறது என அவர் கூறியுள்ளார். அந்த விளக்கக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய கல்வித் தோட்ட அறவாரியத்தின் தலைவர் முனியாண்டி, இந்த நிலத்தைப் பெற பேராக் மஇகாதான் எல்லாவித முயற்சிகளையும் மேற்கொண்டது. அதற்கேற்பவே இந்த நிலமும் வழங்கப்பட்டது. எனினும் இன்று கல்வித் தோட்டம் வெற்றிகரமாக உருவாகியிருப்பதற்கு பேராக் மாநில மஇகா, கல்வித்தோட்ட அறவாரியம், நிலத்துக்கு கடன் அளித்து மேம்படுத்திய தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கம் ஆகிய 3 அமைப்புகளுமே முக்கியமானக் காரணங்களாகும் என்று கூறினார். இந்தத் திட்டம் எந்த ஒரு தனிநபருக்கும், அமைப்புக்கும் உரிமையானதல்ல, மாறாக பேராக் மாநில இந்திய சமூகத்தின் சொத்து என்று அவர் உறுதிப்படுத்தினார். இந்த செய்தி தொடர்பாக கருத்துரைத்த பேராக் மாநில முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் அ. சிவநேசன், பேராக் மஇகா தலைவர்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது என்று கூறியுள்ளார். காரணம் மஇகாவின் பரிந்துரைகள், முயற்சிகள் காரணமாகத்தான் பேராக் மாநில இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக 2,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் கிடைத்தது என்றதொரு போலியான தகவலை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக்கூறுவதன் வழி அதையே உண்மையாக்கிக் கொள்ள முயற்சிக்கின்றனர் என்று அவர் கூறினார். மஇகா-வின் பரிந்துரையில்தான் இந்த நிலம் கிடைத்தது என்பது உண்மை யென்றால், அதற்குமுன் தான் ஆட்சிக்குழுவில் இருந்த காலத்தில் இது தொடர்பாக நடந்த பேச்சு வார்த்தைகளை, கலந்தாய்வு கூட்டங்களை எந்த கணக்கில் வைப்பது என்ற அவர் கேள்வி எழுப்பினார். இது நிலம் தொடர்பாக தான் பேராக் மாநில ஆட்சிகுழுவில் இருந்தபோது, அப்போது பேராக் மாநில மந்திரி பெசாராகப் இருந்த ஸம்ரியுடன் நடந்த கூட்டங்களை எதில் கொண்டு போய் சேர்ப்பது அவர் வினவினார். பக்காத்தான் ராக்யாட் ஆட்சியில் இருந்தபோதுதான் பேராக் மாநில இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக நிலம் ஒதுக்குவது தொடர்பான முன்னெடுப்புகள் சரித்திரத்த்தில் முதன் முறையாக ஆராயப்பட்டது. அதை வெறும் வார்த்தையோடு நிறுத்தி விடாமல் அடுத்த கட்ட நகர்வுகளை நங்கள் மேற்கொண்டு வந்த வேளையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது என்பது மாநில மக்கள் நன்கு அறிந்த உண்மை. அதை மறைக்க மஇக எவ்வளவுதான் முயற்சித்தாலும் உண்மை வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். இந்த போலியான தகவலை தான் தகர்த்துக் கொண்டே இருப்பேன் என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 10 =