பேராக்கில் 36 ஆலயங்கள் திறக்கப்பட்டன

பேராக்கில் 36 இந்து ஆலயங்கள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டன. எதிர்பார்த்ததை விட பக்தர்கள் அதிகமாகவே விதிமுறைகளை பின்பற்றி நடந்து கொண்டனர். பக்த மக்களின் இந்த ஒத்துழைப்பு பாராட்டத்தக்கது என்று பேராக் மாநில இந்து சங்கத்தின் பொன்.சந்திரன் தெரிவித்தார். ஈப்போ புந்தோங் ஓம் வீரமுத்து மகா காளியம்மன் ஆலயம், சிலிபின் அருள்மிகு நாகம்மாள் பரிபாலன சபா ஆலயம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு நான் நேரடியாக சென்று பார்த்தேன். பக்தர்களின் உடல் உஷ்ண நிலையை பரிசோதனை செய்தப்படி, அவர்களின் விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.
அனைத்து விதிமுறைகளை பக்தர்கள் பின்பற்றி நடந்துள்ளனர். அவர்களின் ஒத்துழைப்பினால் ஆலயம் தொடர்ந்து திறக்கப்படும். மேலும், இப்பொழுது வெள்ளி, சனிக்கிழமை மட்டுமே மாலையில் ஆலயம் திறக்கப்பட்ட அனுமதி கிடைத்துள்ளது. ஆகையால், பக்தர்கள் விதிமுறைகளை தொடர்ந்து பின்பற்றினால் முன் போலவே ஆலயம் அன்றாடம் திறக்க அனுமதி கோரப்படும் என்று அவர் கூறினார். இன்னும் பல ஆலயங்கள் அனுமதிக்கு விண்ணப்பம் செய்யாமல் இருக்கின்றனர். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அவர்களும் மலேசிய இந்து சங்கம் மூலம் விண்ணப்பம் செய்யலாம். சுற்று வட்டாரத்து பக்தர்கள் தெய்வ தரிசனம் செய்வதற்கு ஆலய நிர்வாகத்தினர் அரசாங்கம் கொடுக்கும் அனுமதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் விரிவான செய்திகளுக்கு தமிழ்மலர் நாளிதழை வாங்குங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − one =