பேராக்கில் நம்பிக்கைக் கூட்டணி கவிழ்ந்தது!

0

பேராக் மாநிலத்தில் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டு பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சி அமைத்துள்ளது. இதில் அம்னோ, பெர்சத்து, பாஸ் கட்சிகள் இருக்கின்றன என பேராக் மாநில முன்னாள் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமாட் பைசால் டத்தோ அசுமு தெரிவித்தார்.கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி தொடங்கி இன்று வரை எந்தவித அறிவிப்பையும் எங்களால் விடுக்க முடியவில்லை.
அந்த வகையில் நாங்களும் எந்தவித அறிவிப்பும் செய்யவில்லை. ஆனால், இப்பொழுது பேராக் சுல்தானை நாங்கள் சந்தித்து விட்டோம். இனி, பேராக் சுல்தான் பேராக் மாநில மந்திரி பெசார் யார் என்பதை அறிவிப்பார்.
அதைத் தொடர்ந்து, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களை நியமனம் செய்வார்.
பின்னர், கட்டம் கட்டமாக மாநகர மன்ற உறுப்பினர்கள், எம்.பி.கே.கே, கிராமத் தலைவர்கள் நியமனம் செய்யப்படுவர்.
எதுவாக இருந்தாலும் பேராக் சுல்தான் முடிவு செய்வார். மக்களின் நலனுக்காக இந்த ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது. அதையே நாங்கள் செயல்படுத்துகிறோம் என அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − ten =