பேராக்கிலும் மஇகா ஓரங்கட்டப்பட்டுள்ளது

2008 -ஆம் ஆண்டு பேரா மாநில அரசு முதல் முறையாக எதிர்க்கட்சியின் வசம் சென்ற பொழுது மாநில சட்ட மன்றத்தின் சபா நாயகராக ஜசெகவின் சிவக்குமார் நியமிக்கப்பட்டார். பேரா மாநிலத்தில் சபா நாயகராக ஓர் இந்தியர் நியமிக்கப்பட்டு ஒரு புதிய வரலாறு உருவானது. பக்காத்தான் ரக்யாட் கூட்டணி அரசு கவிழ்க்கபட்டவுடன் பாரிசான் நேஷனல் அரசாங்கம் மஇகாவைச் சேர்ந்த டத்தோ கணேசனை சபாநாயகராக நியமனம் செய்தது. அதன் பிறகு பேரா சபா நாயகராக மஇகாவைச் சேர்ந்த அதன் முன்னாள் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எஸ்கே தேவமணியும். வழங்கறிஞரான தங்கேஸ்வரியும் அடுத்தடுத்து நியமிக்கப்பட்டனர். தேசிய முன்னணிக் கூட்டணியின் உறுப்புக் கட்சியான மஇகா இந்த புதிய பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியிலும் இடம்பெற்றுள்ளது. மத்திய அரசு ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டப்பிறகு மஇகாவிற்கு ஒரே ஒரு அமைச்சர் பதவி மட்டுமே வழங்கப்பட்டு மற்ற அரசு சார்பு நிறுவனங்களிலும், மஇகா ஓரங்கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் பேரா சட்டமன்றத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றத்திற்குப் பிறகு புதிய சபா நாயகர் தேர்வுக்கு மஇகா பரீசீலிக்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அது மஇகாவிற்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here