பேரங்காடிகள், ஹோட்டல்களுக்கு செல்பவர்களுக்கு நுழைவாயிலில் மட்டுமே வெப்ப பரிசோதனை

பேரங்காடிகள் மற்றும் ஹோட்டல்களுக்குச் செல்பவர்களுக்கு நுழைவாயிலில் மட்டுமே உடல் வெப்பப் பரிசோதனை செய்யப்படும் என மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
இருப்பினும் பேரங்காடிகளில் உள்ள கடைகளுக்குச் செல்பவர்கள் தங்களுடைய பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களைப் பதிய வேண்டும் என்றார் அவர்.
நேற்று சுகாதார அமைச்சு மற்றும் தேசியப் பாதுகாப்பு மன்றத்துடன் நடத்தப்பட்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார். ஆகையால் பேரங்காடியில் உள்ள ஒவ்வொரு கடைக்கும் செல்லும்போது உடல் வெப்பப் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றார் அவர். இதனிடையே வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் தீம் பார்க்குகளை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
நாடு முழுவதும் 54 தீம் பார்க்குகள் உள்ளன. இவற்றில் சுமார் 10,000 பேர் வேலை செய்து வருகின்றனர்.
இவற்றில் நிர்ணயிக்கப்பட்ட பணி நெறிமுறைகள் நிச்சயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one + four =