பேபி உருளைக்கிழங்கு தயிர் சாலட்

தேவையான பொருட்கள்:

பேபி உருளைக்கிழங்கு – 2 கப்
தயிர் – 2 கப்
ஆலிவ் ஆயில் – 2 ஸ்பூன்
மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
லெமன் ஜூஸ் – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
வெங்காயத்தாள் – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு

செய்முறை:

பேபி உருளைக்கிழங்கை 2 ஆக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும். ப.மிளகாய், வெங்காயத்தாள், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வேக வைத்த பேபி உருளைக்கிழங்கை போட்ட அதனோடு மேலே கொடுத்துள்ள அனைத்து பொருள்களையும் (வெங்காயத்தாள், கொத்தமல்லி தவிர) கலந்து அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். பரிமாறும் போது வெங்காயத்தாள், கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். சுவையான பேபி உருளைக்கிழங்கு தயிர் சாலட் ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here