பேச்சிபாறையில் வெள்ளப்பெருக்கு- ஆற்றில் மூழ்கி இறந்த குட்டியானை

கன்னியாகுமரி மாவட்டம் கோதையார் பகுதியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்ததால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது இதனால் கோதையாறு, மோதிரமலை, குற்றியார் உள்ளிட்ட 15 கிராமங்கள் துண்டிக்கப்பட்டது.மேலும் அங்குள்ள தரை பாலமும் உடைந்தது. இதில் ஏராளமான காட்டு விலங்குகள் நீரில் சிக்கி தவித்தது. இந்த நிலையில் அப்பர் கோதையார் பகுதியில் நேற்று பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 6 மாத குட்டி யானை ஒன்று நீரில் அடித்து வரப்பட்டு உயிரிழந்த நிலையில் பேச்சிப்பாறை வனப்பகுதிக்குள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + 4 =