பெர்லிஸில் ஸகிர் நாயக் உரையாற்றத் தடை!

0

பெர்லிஸில் இன்று வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள “மலேசியா ரிவர்ட்ஸ் கேம்ப் 2019″ நிகழ்ச்சியை இரத்து செய்யுமாறு பெர்லிஸ் காவல் துறை நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை அறிவுறுத்தியுள்ளது. இந்நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக்குடன் அவரது குடும்பத்தினரும் உரையாற்றுவதாக இருந்தது. 

ஜாகிருக்கு எதிராக இதுவரையிலும் 150-க்கும் மேற்பட்ட காவல் துறை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், பெர்லிஸ் காவல் துறைத் தலைவர் நூர் முஷார் முகமட் இத்தடையை வெளியிட்டார்.  கடந்த வாரம் கிளந்தானில் தமது உரையின் போது சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதைத் தொடர்ந்து, மலேசிய இந்தியர்கள் மற்றும் சீனர்கள் மத்தியில் கோபத்தைத் தூண்டியுள்ளார்.

இத்தடையை மீறி ஜாகிரைப் பேச அனுமதித்தால், 2012-ஆம் ஆண்டுக்கான அமைதி சட்டம் மற்றும் அது தொடர்பான சட்டங்களின் கீழ் ஏற்பாட்டாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

“நாம் ஒரு பன்முக நாடு. இன்று நாம் அனுபவிக்கும் அனைத்து தரப்பினரின் உணர்வு, நாடின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நாம் கவனித்துக் கொள்ள வேண்டும். அதனை உறுதி செய்வதற்கு நான் பொறுப்பு. அவர் பெர்லிஸுக்கு வரலாம், ஆனால் அவர் எந்த உரையும் ஆற்ற முடியாது.” என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஜாகிர் மற்றும் அவரது பாதுகாப்பைக் கருதி “மலேசியா ரிவர்ட்ஸ் கேம்ப் 2019” நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று தாம் அறிவுறுத்தியுள்ளதாக பெர்லிஸ் முஃப்தி முகமட் அஸ்ரி குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − six =