பெர்சத்து தலைவர் பதவிக்கு முஹிடின்-முக்ரிஸ் மோதல்

0

அடுத்த மாதம் நடைபெற விருக்கும் கட்சித் தேர்தலில் பெர்சத்து தலைவர் பதவிக்கு பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினை எதிர்த்து கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் போட்டியிடுகிறார். மற்றொரு வேட்பாளரான செராஸ் பெர்சத்து தலைவர் முகமட் பாய்ஸ் அஸ்லி ஷாமும் பெர்சத்து துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். முக்ரிஸை கட்சித் தலைவர் பதவிக்கு அவரது மூத்த சகோதரர் மொக்சானி மகாதீர் முன்மொழிந்தார். கட்சியின் பொதுச்செயலாளரும் மகாதீரின் முக்கிய ஆதரவாளருமான டத்தோ மர்ஸுக்கி யஹ்யா வழி மொழிந்துள்ளார்.
கடந்த மாதம் அம்னோ – பாஸ் ஒத்துழைப்புடன் மகாதீருக்கு எதிராக ஒரு புதிய அரசாங்கத்தை முஹிடின் யாசின் அமைத்ததைத் தொடர்ந்து, பெர்சத்து துணைத் தலைவரான முக்ரிஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார். நேற்று கட்சிப் பதவிகளுக்கான வேட்பு மனுத் தாக்கலில் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ள முஹிடின் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
கட்சித்தலைவர் பதவிக்கு மற்றொரு வேட்பாளரான செராஸ் பெர்சத்து தலைவர் முகமட் பாய்ஸ் அஸ்லி ஷாமும் போட்டியிடுகிறார்.
இதற்கிடையே, முக்ரிஸ் வகித்து வந்த துணைத் தலைவர் பதவிக்கு டத்தோ மர்ஸுக்கி யஹ்யா போட்டியிடுகின்றார். அவரை அப்பதவிக்கு தற்சமயம் துணைத்தலைவராக இருக்கின்ற முக்ரிஸ் மகாதீர் முன்மொழிந்தார். மகாதீர் வழி மொழிந்துள்ளார்.
துணைத்தலைவர் பதவிக்கு மேலும் இருவர் போட்டியிடுகின்றனர். பேராக் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அஹமட் பைசால் அசுமும், அம்பாங் பெர்சத்துவை சேர்ந்த அனாஸ் அஹ்ஹாச நஸ்ரியும் அப்பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
பெர்சத்து 3 உதவித் தலைவர் பதவிகளுக்கு 15 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். பெர்சத்து கட்சி அமைக்கப்பெற்று நடைப்பெறும் முதல் தேர்தல் இதுவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − 5 =