பெர்சத்து இன்றி அம்னோவுடன் இணைந்து பாஸ் போட்டியிடாது

பெர்சத்துவை இணைத்துக் கொள்ளாவிட்டால் வரும் 15ஆவது பொதுத்தேர்தலில் பாஸ், அம்னோவுடன் இணைந்து போட்டியிடாது என தேசிய முன்னணி தலைமைச் செயலாளர் அனுவார் மூசா தெளிவுபடுத்தினார்.
அம்னோ, பாஸ், பெர்சத்து ஆகியவை ஒன்றிணைந்துதான் 15ஆவது பொதுத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என அந்த இஸ்லாமியக் கட்சி உறுதியாக இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
கடந்த புதன்கிழமை நடந்த முவாஃபக்காட் நேஷனல் கூட்டத்தில் தனது இந்த நிலைப்பாட்டை பாஸ் தெளிவு படுத்தி விட்டதாக கூட்டரசுப் பிரதேச அமைச்சருமான அவர் சொன்னார்.
இதனிடையே அம்னோவை பெர்சத்து ஓரங்கட்டி விட்டதாகக் கூறப்பட்டு வரும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என கெர்த்தே நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
பெர்சத்து அம்னோவைப் புறக்கணித்து வருகிறது என்ற ஆதாரமற்ற தகவல்களை சில அம்னோ தலைவர்கள் வெளியிட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் அமைச்சரவையில் பகுதி அமைச்சர்கள் தேசிய முன்னணியைச் சேர்ந்தவர்கள் என அவர் சுட்டிக்காட்டினார்.
ஆகையால் அம்னோவிற்கு முக்கியத்துவம் வழங்கவில்லை என்று கூறப்படுவதில் உண்மை இல்லை என அவர் சொன்னார்.
பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தைக் கவிழ்க்க பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் கைகோர்க்கும் அம்னோ தலைவர்களை அவர் கடுமையாகச் சாடினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × four =