பெர்சத்துவை அம்னோ சிறுமைப்படுத்தி வருகிறது

பெர்சத்து கட்சியை அம்னோ தொடர்ந்து சிறுமைப்படுத்தி வருவதாக முன்னாள் ஜொகூர் மந்திரி பெசார் டத்தோ ஒஸ்மான் சாப்பியான் கூறினார்.
வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் பெர்சத்துவிற்கு தொகுதிகள் வழங்கப்படக் கூடாது என அம்னோவைச் சேர்ந்த தலைவர்கள் வலியுறுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
பெர்சத்து ஒரு சிறிய கட்சி என்றும் அக்கட்சிக்கு செல்வாக்கு இல்லாததால் வரும் பொதுத் தேர்தலில் அக்கட்சிக்கு தொகுதிகள் வழங்கப்படுவதில் பயன் ஏதும் இல்லை என்றும் அம்னோவின் சில தலைவர்கள் கூறி வருவது வேதனையை தருவதாக பெர்சத்து கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினரான அவர் சொன்னார். அம்னோவிடமிருந்து இதுபோன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டும் பெர்சத்து தலைவர்கள் மௌனம் சாதித்து வருவது தமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக அவர் சொன்னார். இதன் காரணமாகத் தான் பெர்சத்துவிலிருந்து தாம் சற்று ஒதுங்கியிருப்பதாக நேற்று சினார் ஹரியான் தினசரிக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.
பெர்சத்துவை அம்னோ தொடர்ந்து சாடி வந்த போதிலும் பெர்சத்து தலைவர்கள் தற்காத்து பேசாமல் மௌனமாக இருந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஆகையால், அண்மைய சிலிம் சட்டமன்ற இடைத்தேர்தலில் பெர்ஜூவாங் வேட்பாளருக்கு ஆதரவாக தாம் பிரசாரம் செய்ததில் தவறு ஏதும் இல்லை என்று ஒஸ்மான் சாப்பியான் தெரிவித்தார். கடந்த வாரம் ஜொகூர் அமானா தலைவருடன் தாம் சந்திப்பு நடத்தியது உண்மைதான் என அவர் தெளிவுப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × two =