பெர்சத்துவிலிருந்து மகாதீர் மற்றும் இதர நால்வரின் நீக்கம் செல்லுபடியாகாது!

KUALA LUMPUR 29 JANUARI 2019. Peguam, Mohamed Haniff Khatri Abdulla (kiri) hadir pada Mahkamah Tinggi Kuala Lumpur mewakili tujuh individu bagi permohonan semakan kehakiman mencabar keputusan kerajaan menguatkuasakan larang merokok di semua premis makan Januari Lalu. NSTP/ASWADI ALIAS.

பெர்சத்து அவைத் தலைவர் துன் மகாதீர் மற்றும் இதர 4 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்க பெர்சத்து அமைப்புச் செயலாளர் முகமட் சுஹாய்மி யஹ்யா வெளியிட்டுள்ள கடிதம் செல்லுபடியாகாது என முகமட் அனிப் கத்ரி கூறினார்.
மே 28ஆம் தேதியிடப்பட்ட அந்த நீக்கக் கடிதம் சட்டத்திற்கு உட்பட்டதல்ல. பெர்சத்து சட்டவிதிகளின்படி கட்சியின் அமைப்புச் செயலாளர் இந்த கடிதத்தை வெளியிடக்கூடாது என்றார் அவர்.
துன் மகாதீர், பெர்சத்து துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முக்ரிஸ், இளைஞர் பிரிவித் தலைவர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான், கட்சியின் உச்சமன்ற உறுப்பினரும் மஸ்லிம் மாலேக், அமிருடின் ஹம்ஸா ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக முகமட் சுஹாய்மி கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த முடிவை எடுக்க முகமட் சுஹாய்மிக்கு அதிகாரம் கிடையாது என அனிப் கத்ரி தெரிவித்தார்.
இந்த விகாரம் குறித்து துன் மகாதீர் மற்றும் இதர நால்வருடன் கலந்தாலோசித்த பிறகே அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன என்றே முடிவு எடுக்கப்படும் என்று அவர் சொன்னார். இதனிடையே, கட்சியிலிருந்து தாங்கள் நீக்கப்பட்டது செல்லுபடியாகாது என இந்த 5 தலைவர்களும் கூட்டறிக்கை ஒன்றில் கூறினர்.
வரும் கட்சித் தேர்தல்களை சந்திப்பதில் பெர்சத்து தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் துணிச்சல் இல்லாத காரணத்தினால்தான் தங்களுக்கு எதிராக இந்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 3 =