பெரோடுவா இந்த ஆண்டு 240,000 யூனிட் விற்பனை இலக்கை அடைய திட்டம்


கோவிட்-19 நோய்த்தொற்று நிலைமை மற்றும் வாகன உபகரணங்கள் பற்றாக்குறை பிரச்சினை இருந்தபோதிலும் 2021 ஆம் ஆண்டில் 240,000 யூனிட் விற்பனை இலக்கை பெரோடுவா நிறுவனம் கொண்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், பெரோடுவா 96,281 யூனிட் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
பெரோடுவா நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டத்தோ ஜைனல் அபிதீன் அஹ்மட் கூறிகையில், கடந்த மே மாதத்தில் பதிவு செய்யப்பட்ட விற்பனையானது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் விற்கப்பட்ட 52,920 வாகனங்களில் இருந்து 82 சதவீதம் அதிகரித்துள்ளது என்றார்.
“2019 செயல்திறனுடன் ஒப்பிடும்போது 2021 செயல்திறன் சிறப்பாக உள்ளது. கோவிட்-19 நோய்த்தொற்றின் விளைவுகள் மற்றும் வாகன உபகரணங்கள் பற்றாக்குறை பிரச்சினை ஆகியவற்றால் பெரோடுவாவின் விற்பனை ஏப்ரல் மாதத்தில் 20,399 யூனிட்டுகளிலிருந்து மே மாதத்தில் 17,973 யூனிட்டுகளாக குறைந்தது. அதாவது 12 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
“கோவிட்-19 சவால்கள் இருந்தபோதிலும், எங்கள் எல்லா மாடல்களுக்கும் தொடர்ந்து வலுவான கோரிக்கை இருந்தது. இந்த ஆண்டு 240,000 யூனிட் இலக்கை அடைய பெரோடுவாவால் முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்“ என்று அவர் நேற்றுஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
விற்பனை வரி விலக்கு காலத்தை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டித்தமைக்கு பெரோடுவா நிறுவனம் அரசுக்கு நன்றி தெரிவித்தது. இதனால் பெரோடுவா வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யவும், பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், மலேசியாவின் வாகன சுற்றுச்சூழல் அமைப்பை பராமரிக்கவும் முடியும் என்று ஜைனல் அபிடின் கூறினார்.
“இந்த கோவிட்-19 நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் மக்களின் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பிற்கும் அவசியமானவை என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். நாங்கள் எங்கள் சப்ளையர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுடன் சேர்ந்து கோவிட் -19 தாக்கத்தைக் குறைக்க அரசாங்கத்துடன் முழுமையாக ஒத்துழைப்போம்“ என்று அவர் கூறினார்.
இந்த முழு கட்டுப்பாட்டுக் காலத்தில் வாடிக்கையாளர்கள் அருகிலுள்ள சேவை மையத்தைத் தொடர்புகொண்டு பெரோடுவாவின் அண்மைய தகவல்களைப் பெறலாம் என்று ஜைனல் கூறினார்.
“புதிய வாகனங்களை வழங்கும் எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் இந்த கோவிட்-19 காலத்தில் பொறுமையுடன் காத்திருந்ததற்கு நாங்கள் எங்ககளின் நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறோம்“ என்று அவர் கூறினார்.
மேலும், பெரோடுவா மே மாதத்தில் 18,283 வாகனங்களை உற்பத்தி செய்தது. இந்த ஆண்டு இதுவரை அதன் மொத்த உற்பத்தியை 98,944 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen + 16 =