பெரும்பான்மை இருந்தால் அச்சம் ஏன்?

0

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்குமாயின், பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து நடப்பு அரசாங்கம் அச்சம் கொள்ளத் தேவையில்லை என முன்னாள் பெர்சே 2.0 தலைவர் டத்தோ அம்பிகா சீனிவாசன் தெரிவித்தார். நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு பேரரசரை அவமதிப்பதற்குச் சமமாகும் என்ற பாஸ் தலைவர் ஹாடி அவாங்கின் அறிக்கை ஏற்புடையதல்ல என்றார் அவர்.
நமது நாடுஅரசியலமைப்பு ஜனநாயகத்திற்கு உட்பட்டது. கூட்டரசு அரசியலமைப்புத் தான் மேன்மையானது. இந்த நிலையில் பேரரசரின் பங்கு தெளிவாக உள்ளது என அவர் சொன்னார்.
ஆகையால் ஒரு தலைவரை பிரதமராக ஆதரிக்க எம்பிக்களின் எண்ணிக்கையே மிக முக்கியமான ஒன்று என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான வாக்களிப்பு தீர்க்கமான மற்றும் நிலைத் தன்மையான முடிவைத் தரும் என அவர் சொன்னார்.
ஆகையால் முஹிடினுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் சட்டத்திற்கு உட்பட்டது என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × five =