பெரும்பான்மையை நிரூபிக்க அவசர நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட வேண்டும்

தமக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்பதை நிரூபிக்க டான்ஸ்ரீ முஹிடின் யாசின் ஓர் அவசர நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்த வேண்டும் என ஜசெக புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங் வலியுறுத்தினார். அடுத்த வாரம் தொடங்கவிருந்த நாடாளுமன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்றார் அவர்.

காரணம் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்திற்குத் தயாராக இன்னும் அறிவிக்கப்படாத தனது அமைச்சரவைக்கு போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும் என்றார் அவர். இருப்பினும் மக்களவையில் தமக்கு பெரும்பான்மை உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ள பொதுமக்கள் ஆர்வமாக உள்ளதால், அவசர நாடாளுமன்றக் கூட்டத்தை பிரதமர் கூட்ட வேண்டும் என அவர் சொன்னார். குறிப்பிட்ட ஒரு காரணத்திற்காக சிறப்பு நாடாளுமன்றத்தைக் கூட்ட பிரதமருக்கு அதிகாரம் உண்டு என நாடாளுமன்ற விதிமுறையின் 11(3) பிரிவு வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − thirteen =