பெரும்பான்மையைப் பெற முடியாத அரசு ஆடியோ பதிவைப் பயன்படுத்துகிறது!

    தாம் அம்னோ தலைவர் அமாட் ஸாஹிட் ஹமிடியுடன் தொலைபேசியில் அரசியல் பேசவில்லை என்று அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார்.தமக்கான மக்களின் ஆதரவைக் குறைக்கவே, தம்முடைய தொலைபேசி உரையாடலை ஓர் அரசியல் கருவியாகப் பயன்படுத்தி தமக்கு எதிரான வெறுப்பைத் தூண்ட அரசு திட்டமிட்டு செயல்படுவதாக அன்வார் இப்ராஹிம் குற்றம் சாட்டினார்.அந்த ஆடியோ பதிவு பொய்யாக ஜோடிக்கப்பட்டது என்றும் அதில் தாம் பேசவில்லை என்றும் குறிப்பிட்ட அன்வார், அரசு அம்னோவில் பிளவை ஏற்படுத்த, மோசடி, அச்சுறுத்தல், லஞ்சத்தையும் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். அன்வார் மற்றும் அமாட் ஸாஹிட் ஹமிடி ஆகியோரின் குரலில் பேசும் 4 நிமிட தொலைபேசி உரையாடல் மக்களிடையே வைரலாகப் பரவி வருகிறது. அதில் அன்வாரின் குரலில் பேசும் நபர், அம்னோ பொதுப்பேரவையை ஸாஹிட் நல்ல முறையில் நடத்தியதற்காகப் பாராட்டுகிறார். அந்த வீடியோ உரையாடல் சம்பந்தமாக போலீஸில் புகார் அளிக்கப்படும் என்று அன்வார் தெரிவித்தார். இதனிடையே, அந்தத் தொலைபேசி உரையாடலை மறுத்த ஸாஹிட், அது பற்றிப் போலீசில் புகார் அளிக்கப்படும் என்று தெரிவித்தார். அன்வார் மேலும் கூறும்போது, அமானாவும் ஜசெகவும் பிகேஆருக்கு பக்கபலமாக இருப்பதாகவும், இந்த விவகாரம் எவ்வகையிலும் தங்களின் நட்புறவைப் பாதிக்காது என்றும் குறிப்பிட்டார். கடந்த மாதம், அம்னோவுடன் பிகேஆர் ஒத்துழைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அன்வார் தெரிவித்த வேளையில், அதனை அக்கட்சியின் உதவித் தலைவர் சாங் லி காங் உறுதிப்படுத்தியுள்ளார்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    five − 3 =