பெருநாளன்று கடமையில் இருந்த கணவரை சந்தித்ததற்காக ரிம.2000 அபராதம்


  நோன்புப் பெருநாள் தினத்தின்போது சாலை தடுப்பில் கடமையில் ஈடுபட்டிருந்த தமது கணவரை சென்று கண்டதற்காக காவல் படை அதிகாரி ஒருவரின் மனைவிக்கு வெ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது.
  தமது 2 பிள்ளைகளுடன் சாலை தடுப்பில் கணவரை சந்திக்க சென்ற அந்த மனைவியின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் எஸ்ஓபியை மீறியதற்காக அந்த காவல் படை அதிகாரி மனைவிக்கு 2,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டதாக புத்ராஜெயா மாவட்ட தலைமை போலீஸ் முகமட் பட்ஸில் அலி கூறினார். இந்த விவகாரத்தில் மக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  8 − 5 =