பெருகிக்கொண்டே இருக்கும் குப்பை கழிவுகளால் சுற்றுச்சூழல் சீர்கேடு

நகரப்பகுதி மக்களின் சுகாதார சீர்கேடு முறையால், பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகிறது. அந்நிலையில், ஜாலான் பாசாரில் சாந்தி புக் ஸ்டோர் அருகில் கால்வாய் கழிவுகள் குவியலாக கடந்த நான்கு நாள்களாக அப்புறப்படுத்தாமல் கிடப்பதாக அந்த வணிக வரிசையில் முடி திருத்தும் கடையை நடத்தி வரும் மணி முருகேசு கண்டனம் தெரிவித்தார்.
அந்த கழிவு மேட்டில் உடைந்த கண்ணாடி துகள்கள், பழைய நெகிழிப்பைகள், வீட்டில் உபயோகப்படுத்திய பொருள்களில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. அதனால், அப்பகுதி வணிக மக்கள் பயனீட்டாளர்களின் சுகாதாரத்திற்கு சவால் விடுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தினசரி குப்பை, கழிவுகளை பொறுத்தவரை அரசாங்கம் அப்புறப்படுத்தி வருவதாக தெரிவித்திருந்தாலும், சிறிய, பெரிய கடைகளின் மூலம் உருவாகும் கழிவுகள் ஆங்காங்கே குவிக்கப்பட்டு வருகிறது.
அக்குப்பைகளையும், கழிவுகளையும் குப்பை லோரிகள் காலம் கடத்தாமல், அகற்றும் செயல் முறையாக இல்லாததால், சுற்றுப்புற சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஏராளம் என்று மணி சாடினார்.
மேலும், பலதரப்பட்ட கால்வாய் கழிவு குப்பைகள் குவிக்கப்படுவதால், அதிலிருந்து நச்சுக் காற்று உருவாகி பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது என்று சுகாதார அமைச்சகம் மக்களுக்கு உணர்த்தி வருகிறது என்றார் மணி.
இந்நிலையில், கடந்த சில காலமாகவே தெலுக் இந்தான் நகரம் தூய்மைக் கேட்டினால் கவலைக்குரிய நிலையை உள்ளூர் வாசிகளும், சுற்றுப்பயணிகளும் சந்தித்து வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven − one =