பெரிய குடும்பங்களில் காரில் குழந்தை இருக்கை பொருத்தத் தேவையில்லை

0

அதிக உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்கள் தங்கள் வாகனங்களில் குழந்தை இருக்கை பொறுத்தும் சட்டம் தளர்
வாக்கப்படும் என்று போக்கு வரத்துத் துறை துணையமைச்சர் கமாருடின் ஜபார் நேற்று கூறினார்.
இந்தச் சட்டம் அவர்களுக்கு அதிக செலவினத்தையும் சுமையையும் ஏற்படுத்துவதால் அது அவர்களுக்குத் தளர்த்தப்பட் டுள்ளது. ஒரு குடும்பத்தில் 4 குழந்தைகள் இருக்கும் பட்சத்தில், அவர்கள் பயன்படுத்தும் காரில் 4 இருக்கைகள் பொருத்துவது சாத்தியப்படாது.
சா கீ சின் (பக்காத்தான் – ராசா) மக்களவையில் எழுப்பிய சந்தேகத்துக்கு கமாருடின் இவ்வாறு விளக்கம் கூறினார். வாகனங்களில் குழந்தை இருக்கை மற்றும் கவசப் பட்டை பொருத்தும் உத்தரவு கட்டம் கட்டமாகவும், பொது மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையிலும் அமலாக்கம் காணும். அதே வேளையில் இறக்குமதி வரி விலக்கும், விற்பனை-சேவை வரி குறைப்பும் குழந்தை இருக்கைக்கு விதிக்கப்படும். இது மக்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாலை விபத்துகளில் சுமார் 15 விழுக்காட்டுச் சிறுவர்கள் பலியாகிறார்கள் என்பதால், அடுத்த ஆண்டு முதல் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here