பெரியநாயக்கன்பாளையம் அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

கவுண்டம்பாளையம்:

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஜெயன் மந்தால். இவரது மகள் அபோதயா மந்தால் (வயது 19). இவர் கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த வீரபாண்டி பேரூராட்சி பகுதி நாயக்கனூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் அபோதயா மந்தாலிடம் செலவுக்கு கையில் பணம் இல்லை. இதனால் கடந்த 3 நாட்களாகவே மனவருத்தத்துடன் இருந்தார். இந்த நிலையில் நேற்று வயிற்று வலி என்று கூறிவிட்டு கல்லூரிக்கு செல்லாமல் விடுதியிலேயே இருந்தார்.

இந்த நிலையில் அவரது தோழிகள் கல்லூரிக்கு சென்றுவிட்டு அறைக்கு வந்தபோது அபோதயா மந்தால் அறையில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + thirteen =