பெரிக்காத்தான் நேஷனல் தாக்குப்பிடிக்குமா?

தற்போது உள்ள பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் 111 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு தாக்குப்பிடித்துக் கொண்டிருப்ப தாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.இந்த அரசாங்கம் வெறும் 111 உறுப்பினர்களின் ஆதரவோடு தாக்குப்பிடித்துக் கொண்டிருப்பது குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.
பல பதவிகள் வழங்கப்பட்ட போதிலும் வெறும் 111 உறுப்பினர்கள் மட்டுமா என ஓர் அறிக்கையில் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
விநியோகம் சட்டத்திருத்த மசோதா தொடர்பில் ஆளுங்கட்சிக்கு 111 வாக்குகள் கிடைத்துள்ளன. அதே சமயம் 106 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள் ளனர். 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. 222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் பாதிப்பேர் ஆதரவாக வாக்களித்திருப்பது தெரிய வந்திருக்கிறது. 7.18 பில்லியன் வெள்ளி கூடுதல் தொகை ஒதுக்கீடு குறித்து நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பக்காத்தான் ஹராப்பானைச் சேர்ந்த 3 நாடாளு மன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள
வில்லை. இதில் வாரிசான் தலைவரும் செம்பூர்ணா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ ஷாபி அப்டாலும் அடங்குவார். சபா மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால், தேர்தல் பணியில் தீவிரமாக இருப்பதால், தங்களால் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என அவர்கள் விளக்கம் அளித்திருப்பது மனநிறைவு தருவதாக அன்வார் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − seven =