பெரிக்காத்தானின் பதிவுக்கு அம்னோ-பாஸ் ஆதரவு இல்லை

0

பெரிக்காத்தான் நேஷனலை பதிவு செய்யும் முயற்சிக்கு அம்னோ, பாஸ் மற்றும் சரவாக் கட்சிகள் ஆதரவு தெரிவிக்கவி ல்லை என ஜொகூர் அம்னோ துணைத் தலைவர் நூர் ஜஸ்லான் முகமட் கூறினார்.
அம்னோ-பாஸ் கூட்டணியான முவாஃபக்காட் நேஷனல், சரவாக்கின் ஜிபிஎஸ் ஆகிய கட்சிகள் முஹிடினை பெரிக்காத்தான் நேஷனல் பிரதமர் என்ற வகையில்தான் ஆதரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் பதிவு பெற்ற ஒரு கூட்டணியாக பெரிக்காத்தான் நேஷனல் போட்டியிடுவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட வில்லை என அவர் சொன்னார்.
பக்காத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி போன்று பெரும்பான்மை வாக்காளர்களுக்கு அறிமுகமான கூட்டணியாக பெரிக்காத்தான் இல்லை என உள்துறை முன்னாள் துணையமைச்சருமான நூர் ஜஸ்லான் தெரிவித்தார்.
அதே வேளையில், பெரிக்காத்தான் நேஷனலின் பங்காளிக்கட்சியான பெர்சத்து விற்கு அடிமட்ட ஆதரவு இல்லை
என பூலாய் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.

பெரிக்காத்தான் நேஷனல் பதிவு பெற்றாலும், அந்த கூட்டணியின் சின்னம் தேசிய முன்னணி மற்றும் பாஸ் சின்னங்களைப் போன்று அறிமுகமானதாக இருக்காது என்றார் அவர். அடிமட்ட நிலையில் பெர்சத்துவின் பலவீனம், பெரிக்காத்தான் நேஷனலை பாதிக்கும் என தாம் நம்புவதாக அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + 17 =