பெயரை பதிவு செய்யவில்லை; 7 வாடிக்கையாளர்களுக்கு தலா 1,000 வெள்ளி அபராதம்

0

உணவகத்தில் சாப்பிடச் சென்றவர்கள் தங்களின் பெயர்களை வருகையாளர் பதிவு புத்தகத்தில் பதியத் தவறியதால் 7 வாடிக்கையாளர்களுக்கு தலா 1,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பினாங்கு, பந்தாய் பெர்சே என்ற இடத்தில் உள்ள உணவகத்துக்குச் சென்றிருந்த போது தனது விவரங்களைப் பதிவு செய்யத் தவறியது, உடல் வெப்பத்தை பரிசோதிக்க தவறியது போன்ற குற்றத்திற்காக 7 வாடிக்கையாளர்களுக்கு இந்த ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதோடு உணவக உரிமையாளர், பல்வேறு குற்றங்களைப் புரிந்திருந்ததை அடுத்து, உணவகத்தை 7 நாட்களுக்கு மூட உத்தரவிடப்
பட்டிருப்பதாக வட செபெராங் பிறை மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர்சாய்னி
முகமட் நோர் தெரிவித்தார். வாடிக்கையாளர்கள் கூடல் இடைவெளியைக் கடைப்பிடிப்பதையும் முகக் கவசங்கள் அணிந்திருப்பதையும் உறுதிச் செய்யாதது போன்றவை, உணவக உரிமையாளர் புரிந்த குற்றங்களில் அடங்கும் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − nine =