பெண்களுக்கு இடுப்பில் மடிப்பு இருந்தால் இந்த பிரச்சனைகள் வரும்

இடுப்பில் டயர் போட்டு விட்டது’ என்பார்கள். அதாவது இடுப்பில் சதை போட்டு, மடிப்பு மடிப்பாகத் தெரியும். இது தான் பெண்களின் உடல் ரீதியான பல பிரச்னைகளுக்கு வெளிப்படையாகத் தெரியும் அறிகுறி என்றால் நம்புங்கள். பல பெண்கள் இடுப்பில் கொஞ்சமாக சதை போட்டால் பார்க்க அழகாக இருப்பதாக நினைக்கிறார்கள். அது தான் தவறு. உங்கள் உடலின் எடை கூடப் போகிறது. தொப்பை போடப் போகிறது.

இதயம் உள்ளிட்ட பல நோய்களை நீங்கள் வலியப் போய் வர வழைத்து விட்டீர்கள் என்பதற்கு இது ஒரு அறிகுறி. இடுப்புப் பகுதியில் தோலுக்கு அடியில் “சப்ஜடேனியஸ்’ என்னும் கொழுப்பு இருக்கிறது. இடுப்புப் பகுதிக்கு எந்த வேலையும் கொடுக்காத போது, இக்கொழுப்பானது கரையாமல் அங்கேயே தங்கி விடும். இடுப்புப் சதைப் பகுதி பெருத்துப் போய், டயர் போட்டது போல் ஆவதற்கு இதுதான் காரணம்.


சில பெண்களுக்கு, பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் என்கிற ஹார்மோன் மாற்றங்களாலும் இடுப்பில் சதை போட்டு விடும். இந்தக் காரணங்கள் எதுவுமே இல்லாமல், உடல் உழைப்பு எதுவும் இல்லாமல், வளைந்து குனிந்து பெருக்காமல், ஓடியாடி வேலை செய்யாமல், ஒரே இடத்தில் உட்கார்ந்த படி, பல மணி நேரம் டிவி பார்ப்பவர்கள், நொறுக்குத் தீனி சாப்பிடுபவர்கள், கொஞ்சம் கூட உடற்பயிற்சியே செய்யாதவர்களுக்குக் கண்டிப்பாக இடுப்பு மடிப்பு விழும்.

அதை அப்படியே விட்டால், முதலில் உடல் பருமன் அடையும், பிறகு தொப்பை விழும். எடை அதிகரிக்கும். மூச்சு வாங்கும். பி.பி. மெல்ல எட்டிப் பார்க்கும். சுகர் வந்து வந்து போகும். கடைசியில் ஹார்ட் அட்டாக்குக்கும் கிட்னி ஃபெயிலியருக்கும் வழிவகுத்தாலும் வகுக்கலாம் இந்த இம்சைகள் வேண்டுமா? கொஞ்சமே கொஞ்சமாக அக்கறை எடுத்துக் கொண்டாலே, போதும் இந்தப் பிரச்னைகள் வராமலே தடுத்து விடலாம்.

உலகில் 100 கோடி பேர் அளவுக்கு அதிகமான இடுப்புச் சதையால் அவதிப்பட்டுக் கொண்டிருக் றார்கள் என்பது பலருக்குத் தெரிவதில்லை. இதனால் 40 கோடிப் பேர் ஒபிஸிட்டி எனும் உடற்பருமனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னொரு அதிர்ச்சியான தகவல், உலகில் மொத்த இறப்புகளில் 3ல் ஒரு பங்கு இடுப்புச் சதை அதிகம் உள்ளவர்களுக்குத் தான். இதயநோய் சம்பந்த ன இறப்புகள் ஏற்படுகி னறனவாம். இந்த ஆபத்துக்குக் காரணம் முறையற்ற உணவுப்பழக்கம் தான் என்கிறார்கள்.

நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் கலோரித் திறன் அதிகம் இருந்து, நம் உடல் செலவழிக்கும் கலோரித் திறன் குறைவாக இருந்தால், அதுதான் படிப்படியாக இடுப்பைச் சுற்றிலும் சதை போடக் காரணமாகிறது. சர்க்கரை, உப்பு, கொழுப்பு போன்றவற்றை அதிகம் உணவில் சேர்ப்பதும் இடுப்புச் சதை கூட மேலும் ஒரு காரணமாகும். அதாவது நாம் ருசிக்காக உண்பது தான் அதிகம். சத்துக்காக உண்பது குறைவு.

வீட்டுச் சாப்பாட்டை புறக்கணித்து விட்டு, ஃபாஸ்ட்ஃபுட் வகைகள் நொறுக்குத் தீனிகள், குளிர் பானங்கள் அதிகம் உண்பது இன்றைய இளம் தலைமுறையினரிடடையே ஃபேஷனாகி விட்டது. நண்பர்கள் அல்லது நண்பிகள் நான்கு பேர் ஒன்று சேர்ந்தால், இந்த வகை, உணவுகள் தான் அவர்களின் மெனுவில் இருக்கும்.
அரட்டைக் கச்சேரிக்கு நடுவே, இந்தவகை உணவுகள் எவ்வளவு உண்கிறோம் என்ற அளவே தெரியாமல் உண்கிறார்கள். கூடவே உடல் உழைப்பு இல்லாத வேலைகளில் தான் அவர்கள் விரும்பி ஈடுபடுகிறார்கள். கம்ப்யூட்டர், டி.வி. முன் அதிக நேரம் செலவிடுவதும் இதற்கு முக்கிய காரணமாகிறது.

யாருக்கும் ஒரே நாளில் திடீரென்று இடுப்பில் சதைப் போட்டு விடாது. கொஞ்சம் கொஞ்சமாக பல வருடங்கள் கழித்துத் தான் இந்த இடுப்பு மடிப்பு வரும். கொஞ்சம் கொஞ்சமாக சதை கூடும் போது அது பற்றிய அக்கறையோ கவலையோ கொள்ளாதவர்கள், உடலுக்கு ஏதாவது பிரச்னை என்றால் மட்டுமே வருத்தப்படுகிறார்கள்.

இடுப்பில் அளவுக்கு மீறிய சதை போட்டு டயர்போல் பெருத்த பின்னர் தான் அதைக் குறைக்க பலர் படாதபாடுபடுகிறார்கள். அதற்காக கடுமையான உணவுக் கட்டுப்பாடு, கடுமையான உடற்பயிற்சி, பல நாள் பட்டினி, அளவுக்கு அதிகமான மாத்திரைகள் எடுத்து உடனே இடுப்புச் சதையைக் குறைக்க பரபர என்று ஓடுவார்கள். அப்படியெல்லாம் நினைத்த உடன் இடுப்பு மடிப்பை நீக்கி விட முடியாது.

அதற்கு ஒரே வழி, நீங்கள் எவ்வளவு கலோரியை உணவின் மூலம் உடலுக்குள் கொண்டு வருகிறீர்கள். அதில் எவ்வளவு கலோரித் திறனை செலவழிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து தான் இடுப்பு மடிப்பு குறையும். அதாவது, நாம் உட்கொள்ளும் உணவின் அளவு நமது உடல் செய்யும் வேலையின் அளவு இந்த இரண்டிற்கும் இடையே நடைபெறும் வரவு-செலவு கணக்கைப் பொறுத்துத் தான் உடல் எடை கூடும்-குறையும்.

இடுப்புச் சதையைக் குறைக்க உதவும் உணவுப் பழக்கம்:

1. எண்ணெயில் செய்த உணவுகள் எதுவும் கூடாது.

2. மட்டம், முட்டை மஞ்சள் கரு, வெண்ணெய் போன்ற கொழுப்புச் சத்துள்ள உணவு களைத் தவிர்த்து விடுங்கள்.

3. ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள் அதிகம் கூடாது.

4. மது, புகை கூடவே கூடாது.

5. குளிர் பானங்களை அடிக்கடி அருந்தக்கூடாது.

6. நார்ச் சத்துள்ள காய்கறிகள் பழங்கள் அதிகம் உண்ண வேண்டும்.

7. ஓட்ஸ் கஞ்சி நல்லது.

8. உடல் உழைப்பு இல்லாத வேலையில் இருப்போர், அளவான உடற் பயிற்சி, 45 நிமிட நடைப் பயிற்சி அவசியம். இதைத் தொடர்ந்து செய்தாலே இடுப்பில் மடிப்பு விழாது.

9. நடனம் ரொம்ப நல்லது. ஏதாவரு ஒரு நடனத்தை தொடர்ந்து ஆடுங்கள். கண்டிப்பாக இடுப்பில் சதை இருக்காது.

திருமணமான பெண்கள், விவாகரத்தான ஆண்களின் உடல் பருமன் விரைவில் அதிகமாகிறது. அதிலும் இடுப்பு பகுதியில் தான் அதிகம் சதை போடுகிறது என்கிறது சமீபத்திய ஆய்வு. பெண்கள் திருமணத் துக்கு பிறகும், ஆண்கள் விவாகரத்து ஆன பிறகும் உடல் எடை விறுவிறுவென அதிகமாகிறது. இதில் பெரும்பாலானவர்கள் 30 வயதை கடந்தவர்கள். பெரும்பாலும் இடுப்பு பகுதியில் தான் அதிகம் சதை போடுகிறது. இந்த நிலை 50 வயது வரை நீடிக்கிறது. திருமணம் ஆன 2 ஆண்டுகள் வரை அல்லது விவாகரத்தான 2 ஆண்டுகள் வரை இத்தகைய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. திருமணம் ஆகாதவர்களை விட திருமணம் ஆனவர்கள் குண்டாகும் வாய்ப்பு அதிகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve + 19 =