பூர்வகுடி மக்களின் வாழ்வாதாரத்தில் கவனம் செலுத்துதல் அவசியம்

0

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம், அம்மாநிலத்தில் உள்ள பூர்வகுடி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் மூங்கில் மற்றும் காட்டில் இருந்து கொண்டுவரப்படும் இதர பொருட்களுக்கு அதிக முக்கி யத்துவம் கொடுக்க வேண்டும்.
காட்டு மூங்கில்கள் மற்றும் காட்டில் இருந்து தருவிக்கப்படும் இதர பொருட்கள்தான் இந்த பூர்வகுடி மக்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
கம்போங் சொங்கோக், உலுசிலாங்கூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பூர்வகுடி மக்கள் சிலாங்கூர் மாநில விவசாயத்துறை மேம்பாட்டுக் கழகம் இந்த வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தாங்கள் வாழும் குடியிருப்புப் பகுதியில் இருந்த காடுகள் பெருமளவு அழிக்கப்பட்டு விட்டன. இதனால் தங்களின் வாழ் வாதாரங்களும் பாதிக்கப் பட்டிருப்பதாக கம்போங் சொங்கோக் குடியிருப்புப் பகுதியில் வாழும் பூர்வகுடி மக்கள் முன்னதாக புகார் தெரிவித்திருந்ததாக அவர் கூறினார்.
செரண்டா கம்போங் செங்கோக் மற்றும் பத்தாங் காலியில் பூர்வகுடி மக்கள் வாழும் பகுதிகளை அவர்களின் வாழ்விடமாக அறிவித்து அந்த நிலப்பரப்பை ஒதுக்கித்தரும் நடவடிக்கையில் பூர்வகுடி மக்கள் மேம்பாட்டு இலாகா இன்னமும் சில பேச்சுவார்த் தைகளை நடத்தி வருகிறது.
பூர்வகுடி மக்கள் மேம்பாட்டு இலாகா 2017ஆம் ஆண்டு அவர்கள் வாழும் பகுதியில் 247 ஹெக்டர் நிலத்தை மாநில அரசாங்கத்திடம் விண்ணப்பித்திருக்கிறது. இருந்த போதிலும் அந்த விண்ணப்பதை சிலாங்கூர் மாநில அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் அந்த 247 ஹெக்டர் நிலப்பரப்பில் ஒரு சில பகுதிகள் சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் பிடியில் இருக்கிறது என்றும் வேதமூர்த்தி அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 − 2 =